Wednesday, February 6, 2013

கிறுக்கல்கள்


என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள் (5.2.13).

என் தோழியோடான சவாலில் வெற்றி பெற வேண்டும் என ஒரு கவிதை முயற்சி
செய்திருந்தேன்,என் முந்தைய பதிவு அது.அதற்கு ட்விட்டர் அன்பர்கள் பலர் நல்ல பின்னூட்டம் அளித்தனர்.. மறக்கவோ,மறுக்கவோ இடமில்லா
ஓர் நிம்மதி பெருமூச்சு வந்தமர்ந்தது என் நெஞ்சக்கூட்டுக்குள்..
சொல்ல வார்த்தையில்லா மெளனம், சந்தோஷமாய்க்கூட அழ வழிவிடா இன்பம் தந்தது அந்த சொர்க்க நிமிடங்கள்...அந்த அழியா மன ஓட்டத்தை முதலில்
தந்த சக்தி@Sakthivel_twitt, பிரதிபா@talkativewriter, ஷைஜு@iamkanal, கருப்பையா@ikaruppiah, ஜக்தீஷ்@kirukkanjagu,
பஷீர்@puthi_yavan, @get2karthik,@zipzaap, @rjvibishan, @ajitha23, @firoz087, @vnashankar.....
பின் பலர் தங்களின் பின்னூட்டங்களை பதிவு செய்தனர்....(பெயர் குறிப்பிடாதமைக்கு மன்னிக்க)....இவர்கள் அனைவருக்கும் ஆயிரம்
கோடி நன்றிகளை பதிவு செய்ய கடமைப் பட்டிருக்கிறேன்....நன்றீ நன்றீ நன்றீ.............

இந்த மூன்று நன்றிகளில் என் நன்றி உணர்வு அடங்கிவிடவில்லை,இன்னும் என்னுள் நன்றி உணர்வு குவிந்துள்ளது என்றும் குறிப்பிட கடமைப்பட்டுள்ளேன்.....

என் கவி வளர்ந்த விதம் பற்றி...

நான் என் எட்டாம் வகுப்பில் கவி எழுத துவங்கினேன்,கும்பகோனம் தீ விபத்து பற்றி
“கணக்குப் போட்ட பிள்ளைகளை
இன்று கணக்கிட வழியில்லை
தீபம் ஏற்றிய பிள்ளைகளை
இன்று தீபத்தில் பார்க்கும் அவலநிலை
கண்திறக்கவில்லை கடவுள்
பதிலாக,
கண் திறந்தது அரசாங்கம் இன்று பள்ளிகளில்
எடுத்தனர் கீற்றை
கவிதைக்கான லயமில்லா என் முதல் கிறுக்கல் இதுதான்....
அதன் பின்னான நாட்களில் என் எழுத்தார்வத்தை என் தமிழ் ஆசிரியர்களின் தூண்டலில் வளர்த்தேன்....என் கவிதையில் எத்தனையோ விஷயங்களைப்பற்றி எழுதியிருக்கிறேன், காதலை மட்டும் தவிர்த்து.

அப்போதே காதலை கவியாக்கி இருந்தால் முளையிலேயே கிள்ளி எரியப்பட்டிருப்பேன்...
என் பனிரெண்டாம் வகுப்பில் தான் நான் முதல் காதல் கவியொன்றை எழுதினேன் என் பதினாறாம் வயதில். வைரமுத்துவின் வைரவரிகள் என்
inspiration அந்த கவிதைக்கு.
அந்தக் கவிதை:-
“சில்லுகளாய் உடைந்த கண்ணாடியின் சப்தம்
உடைந்தது கண்ணாடி அல்ல
உன் சிரிப்பால்
என் மனம்!
என்ன செய்வேன் நான்,
சிதறிய ஒவ்வொரு சில்லிலும் நீயே சிரிக்கிறாய்!!!
....காதலே இல்லாமல் எப்படித்தான் இப்படிக் கிறுக்கினாயோ என்று என் ஆருயிர் தோழிகளின் செல்லக் கேலியில் என் கவிதை ரசிக்கப்பட்டதை
உணர்ந்தேன்........
இப்படியான என் வாழ்க்கை பயணத்தில் வாழ்க்கையைப் பற்றிய என் முதல் கவிதை பள்ளியில் முதல் அங்கீகாரம் பெற உதவி புரிந்தது.

என் பள்ளியின் அறிவிப்பு பலகையில் எழுதப்பட்டது அந்த கவிதை:-

“வாழ்க்கை ஒரு தேர்வுத்தாள்
நாம்
சொல்வன எழுதப்படும்
செய்வன வரையப்படும்
இறைவனால் திருத்தப்படும்
மதிப்பெண் கொடுக்கப்படும்
அதுவே
தீர்ப்பு எனப்படும்

இப்படித்தான் கிறுக்கிக் கொண்டிருந்தேன்.

என் முதல் பிரசுரிக்கப்பட்ட கவிதை சேயும் தாயும்.
என் கல்லூரி இதழில் வெளியானது...

இன்னமும் கிறுக்கிக் கொண்டுதான் இருக்கிறேன்.எழுதும் ஆர்வத்தில் சில முறை அர்த்தமின்றி உளறிக்கொட்டி குட்டும் வாங்கிக்கொள்கிறேன்.

அஞ்சமாட்டேன்.எழுதுவேன்...

இந்த நிமிடத்தில் நான் ஒரு முக்கியமான கருத்தை தெரிவிக்க விழைகிறேன்,
ஒரேயொரு வேண்டுகோள், நேற்று என் கவிதையால் என் Blog 237 பார்வையாளர்களை தொட்டதென மகிழ்ச்சியோடு அறிவித்த விநாடியில் நீ
பெண்,அதனால் தான் உனக்கு இவ்வளவு வரவேற்பு என்றாள் தோழி. எல்லோரும் அதுபோல் இல்லை என நான் எவ்வளவோ சொல்லியும் அவள்
அதை ஒத்துக்கொள்ளவில்லை. வருத்தம் தந்தது அது.............
திறமையை இனம் காணுங்கள்,இனத்தால் இனம் காணாதீர்கள்---->>பெண்,ஆண் என்ற பாகுபாட்டில் இனம் காண்பவர்களுக்கு மட்டுமே இந்த வேண்டுகோள்.

(எனக்கு சந்தேகமில்லை. என் திறமை,என் திறமைக்காக மட்டுமே ரசிக்கப் பட்டிருக்கும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையும் திமிரும் எனக்கு இருக்கிறது...)
............................................................பிதற்றுவேன்_/\_........................................................................

10 comments:

  1. நீ பெண்,அதனால் தான் உனக்கு இவ்வளவு வரவேற்பு என்று சொன்ன உங்கள் தோழிக்கு என் கண்டனங்கள் ... # அருமையான பதிவு மொத்தமும் வாசித்து முடிக்கும்போது ஒரு குழந்தை பிறந்து ஆளானது போன்ற ஒரு உணர்வு ... மேலும் தொடர வாழ்துக்கள்...

    ReplyDelete
  2. Fantastic and Great. It doesnt matter who writes either men or women, there are people who will only appreciate if it is good thoughts and writing. Please continue doing this wonderful writing.

    Baskar.l

    ReplyDelete
  3. அவ்வ்வ்... என் பெயர் முதல்ல போட்டு இருக்க...நன்றி :))) நீ சின்ன வயசுல இருந்தே பெரிய கவிதாயினியா? கொஞ்சம் அடக்கி தான் வாசிக்கணும் போல.. :)) புகழுக்கு மயங்காத...எனக்கு நானே சொல்லுவது இப்ப உனக்கும்.. உன் தோழி சொன்னது முழுசா பொய் இல்லன்னு என் அனுபவத்துல தோணுது... உடனே நீங்களும் அப்படியான்னு யோசிக்காத.. நான் அப்படி இல்ல.. :))

    ReplyDelete
    Replies
    1. You Retweeted it at first bro, thats why. Not Big poet, just scribbles dats it. thanks pugalukku mayanga maten coz na avlo worth illa ;)en siranda padaipunu edume illa,enda post'um enaku satisfaction tharale :)) and உடனே நீங்களும் அப்படியான்னு யோசிக்காத.. itha nenga sonnadukke ungala odaikanum, en anna pathu na sandegapaduvena? :))

      Delete
  4. "தீபம் ஏற்றிய பிள்ளைகளை இன்று தீபத்தில் " - Awesome lines..

    ReplyDelete
  5. வாவ் உனக்குள்ள இவ்ளோ திறமையா..!! பிரமிப்பா இருக்கு,எழுத்து நடை அழகா இருக்கு,எதோ சாதாரண வரியா படிக்குரப்ப கூட கவிதை நடையிலேயே படிக்க தோணுது...மேன் மேலும் வளர வாழ்த்துகள் :)

    ReplyDelete