Tuesday, September 3, 2013

பெட்ரோமாக்ஸ் லைட்!


என் இனிய ஆண் நட்புகளிடம் பொண்ணுங்கள நம்பாத, லவ் பண்ணேன் என்ன அவ விட்டுட்டு போயிட்டான்னு பொலம்பிக்கிட்டு நிக்காதே என பலமுறை அட்வைசியிருக்கிறேன்....

அவர்களும் ஆச்சர்யக் கடலுக்குள் முழுகி எழுந்திருக்கிறார்கள்.. காரணமென பெரிதாய் நான் சொல்வது ஹிப் ஹாப் தமிழன் ஆதியின் எக்ஸ்க்யூஸ்மீ காதலி பாடல் வரியான "எனைக் காதலித்தாய், பின்பு ஏன் பிரிந்தாய் உன் பெற்றோர்க்காக நாடகமா"

பெரும்பாண்மையில் பெண்களுக்கு பெற்றோரோடு நெருங்கியமர்ந்தபடி தன் மனதிலுள்ளதை எல்லாம் கொட்டும் பாக்கியம் வாய்ப்பதில்லை. அப்படியான வளர்ப்பு சூழலில் நட்பே எல்லாமுமாய் இருக்கும்போது எதிர்பாலின நட்பில் கொஞ்சம் லயிப்போடு காதல் என மனக்கணக்கோடு வாழ்ந்து பின்னாளில் அப்பா எனக்கு வேற மாப்பிள்ளை பாத்துட்டாங்க என கோழைத்தனமாய் பிரிந்து சென்று சாபத்தையெல்லாம் சம்பாதித்துக் கொள்ளும் அந்த அப்'பாவி பெண்கள் மீதான பயத்தினாலேயே இந்த வார்த்தைகளை உதிர்த்திருந்தேன்..

(மீறி காதலில் சிக்கிய தங்கமீன்களுக்கு உதவியுமிருக்கிறேன் அது தனிக்கதை...)

இப்போதெல்லாம் ஆண்களே அத்தனை உஷாராக இருந்துக்கொள்கிறார்கள். நல்லது! ஆனால் விட்டுப்போயிருவா, இவ எங்க நம்ம கூட வரப்போறா, நமக்கும் டைம்பாஸ் ஆவனும்ல என்றெல்லாம் பல முன்னனுபவக் கதைக்கேட்டு கெட்டு போயிருக்கும் ஃபேஸ்புக் ஊடுருவிய இக்கால மண்ணின் மைந்தர்கள் உங்களை அண்ணனா நெனச்சித்தான் பழகினேன் ஆனா இப்படி பேசிட்டீங்களே என்ற வார்த்தைகளை பெரும்பாண்மையில் சந்திப்பதில்லை. மாறாக நான் உன்னை ப்ரபோஸ் பண்ணினதிலிருந்து இன்னைக்கி வரைக்கும் நீ ப்ரெண்டா இருந்தியே ஐ லைக் தட், சோ நாம் நட்பாவே பழகலாம் என உதிர்க்க தொடங்கியிருப்பதாய் கேள்வி... மேலும் காலகாலமாய் காதலித்துவிட்டு உன் அப்பா அம்மாவை உன்னால காயப்படுத்த முடியாது, என்னாலையும் என் அப்பா, அம்மாவுக்கு கஷ்டம் வரக்கூடாது.. சோ பிரிஞ்சிடலாம் என்பன போலவும் காதலை டைம்பாசாய் மாற்றிக் கொண்டிருப்பதாய் கேள்வி...

இதிலிருந்து நான் சொல்ல வருவது என்னவென்றால் பெண்களே "ஐ லவ் யூ"வை நட்பாய், சகோதரப்பாசமாய் பார்க்க கற்றுக்கொள்ளுங்கள். மேலும் உண்மையான காதல்தான் வேணும்னா முடிந்தவரை கவனமாகவும், அவசரப்படாமலும் இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.. ஏன்னா இந்த காலத்துலயும் பெட்ரோமாக்ஸ் லைட் கிடைக்கிறது கஷ்டமப்பா....

இப்படிக்கு,
சீனியர் ஜூனியரென பாரபட்சம் பார்க்காமல் கதை கேட்டு தீர்ப்பு சொல்லி போரடித்துப்போன ஒரு அடிப்பாவி ;)) 


(பி.கு: எஸ், எனக்கு போரடிக்கிது ;)) )

6 comments:

  1. இந்த பதிவ ஒரு தொடரா அலசி ஆரைன்ஹு ஏன் எழுதகூடாது ஹ்ம்ம்

    ReplyDelete
    Replies
    1. சும்மா உளறல்... எழுதனுமேன்னு எழுதினது... :)

      Delete
  2. இந்தப் பதிவ கொஞ்சம் அலசி ஆராய்ந்தா நீங்க வாங்குன அடிய யாரோ வாங்குன மாதிரி சொல்றது தெரியுது (பீகேர்ஃபுல் வித் ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ்) :-))

    ReplyDelete
    Replies
    1. ங்கே! ரொம்ப அலசினா தப்புத்தப்பாதான் கெஸ் பண்ண தோனுமாம்.....// (பீகேர்ஃபுல் வித் ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ்) :-)) -இனி கவனமா இருக்கேன் :))

      Delete
  3. friend ஒருத்திக்கு லவ் பஞ்சாயத்து ஓடிட்டு இருக்கு அவுங்க வீட்ல இப்பொ... இத கொண்டு போயி படிக்க கொடுத்தா உம்மட வீடு தேடி வந்து உதைப்பா... இரு செய்ரேன் :))

    ReplyDelete
    Replies
    1. உங்கள கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கிறேன் ஐயாம் பச்சை மண்ணு :)

      Delete