Wednesday, February 13, 2013

இன்னொரு காதல் கதை!

இன்னுமொரு காதலை கவியாக்கி படைக்கிறேன்,காதலர் தினத்துக்காய்.

அன்பே காதலென
அன்னையின் கரம் பற்றி
அண்ணனின் தோள் சாய்ந்து வாழ்ந்திருந்தேன்,

ஓர் ஒளிப்பார்வையில்
என் இதயம் ஊடுருவி
ஒற்றைப் புன்னகையில்
என்னை இழக்கச் செய்தாய்.

நட்பென கோடி காட்டாமல்
நாம் நடத்திய
மெளனப் பார்வை பரிசளிப்பில்
என் விழி கவ்வி நீயும்
உன் பாதபெருவிரல் கவ்வி நானுமாய்
நாணிச் சிவந்தேன்!

சொல்லா மெளனத்தில் ஆட்கொண்டு
உன் இலக்கிய ரசவாதத்தில்
என் மனக்குட்டைக்குள்
காதல் மீன் பிடித்தாய்!

பேதை நான் என்ன செய்யேன்
குடும்பகெளரவக் கத்தி ஓர் புறம்
தந்தையின் காதல் வெறுப்பு ஒரு புறம்
தனயனின் நட்பொருபுறம்!

மறந்து மரிக்கவோ
உன் மின்னஞ்சல் கடவாகவோ
பிரியமில்லை என விழியமிலம்
வெளியிட்டேன்!

எதிர்த்து போராடி
உறவிழந்து,மதிப்பிழக்க
நானும் தயாரானேன்
உன் ஆழக்காதல் தந்த தைரியத்தில்!

என் கைப்பிடிக்கப் போகும்
கண்ணாளனாய்
என் தாய் தந்தை கவர்ந்த மணவாளனாய் நீ!

உன் விரல் பற்றி அக்னி சுற்ற
ஆயத்தமாய் நான்!!!

3 comments: