Monday, March 25, 2013

கவிச்சரம்



@pisasukutti எடுத்த இந்த புகைப்படத்தைக் கொண்டு ஒரு முயற்சி https://twitter.com/Narumugai_/status/309204849407447040  

இதில் பங்குகொண்டு தங்களது கவிதைகளை பதிவுசெய்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்! 

வானம் பொய்த்ததால்,
வாடிய பயிர்கள்,
வெயிலின் தீக்கு உணவளித்து,
புகையாய் மேகத்தில் கலந்து,
மழையாய் வருகிறது,
உலகப் பயிர் செழிக்க..

பல அடிகளுக்கு பிறகே பசுமை மிகுந்த தோட்டம் உருவெடுக்கிறது,
மனிதனுக்கு மட்டும் விதி விலக்கா என்ன?

வறண்ட நிலம் போல் என் நெஞ்சம், நெருப்பில்லாமல் எரிகிறது

வீடுகளையும் விளைவித்தாய் விளை(லை) நிலமே !

கருத்து சிவந்த வானமும் கவின் மிகு வயலும் எழில் கொஞ்சவைக்கும் கடவுளே நீ கலைஞன்தான்

காவிரி நீர் பாயுது செங்கதிரு சாயுது நம்ம வயிறு காயுது

" பசுமையான வயல்வெளி பசுமை நகராக உருவெடுத்துள்ளது "

@talkativewriter
மஞ்சள் நிற மாலையிலே
கள்வனைப் போல் மழை...நெருங்கி நெருங்கி, அருகில்
வருகிறதே, என் செய்வேன், காதலிப்பதை தவிர..சொர்க்கம் இந்த பூமியில்
மண் வாசனை என் நாசியில். நிஜ சொர்க்கம் வேண்டாமே எனக்கு
மழை மட்டும் போதுமே- கனவாய், நிஜமாய், நிழலாய், உயிராய்- மழை

வண்ணங்களை குழைத்து தீட்டிய ஓவியம் போல விரிகிறது காட்சிரசித்துச் சொல்ல எத்தனிக்கையில் குறுக்கிடுகிறது பசி.

தாய்மைக்காக ஏங்கும் முதிர்கன்னி. #தரிசுநிலம்

இதோ.. பசுமை அழிந்து கொண்டிருக்கின்றதே.. இவ்விடத்தில்தான் வரப்போகிறது "பசுமை நகர்" புது ரியல் எஸ்டேட்..


உனக்கறியாது உன்னைப் பார்க்கிறான் பரிதி, நீ என்றும் எதிர்நோக்கும் மழையே அவன் எதிரி.

No comments:

Post a Comment