Sunday, March 24, 2013

இருளின் வெளிச்சம்!

Thanks @guzhali_ for making me write this with your Art! :)


கடற்கரை மணல், கால் பாதத்தை அணு அணுவாய் வருடிக்கொடுத்து உள்வாங்கியது, 
நானும், இன்று வாங்கிய பேசும் கிளியும் அந்த யாருமற்ற தீவில், ராத்திரியில் உலாவினோம்!
பதட்டமாய் இருந்தேன் நான்.




நான்: எப்படி இங்க வந்தேன்?
கிளி: நான் கடவுளின் தூதுவன், உங்க சித்தி டார்ச்சர விட்டு எப்படியாவது தனியா இருக்கனும்னு கேட்டியே அதுக்காக கடவுள் என்னை அனுப்பினார், நீ கொடுத்த தானியத்தை நான் கடிச்சப்போ உன் விரலை என் அலகு உரசிச்சு, நாம் இங்க வந்துட்டோம், காலை வரை இங்கத்தான்!

கேட்டு பிரமித்துவிட்டேன்,

ஏதோ ஒரு நாளாவது தனிமை கிட்டியதே என மகிழ்ச்சியுடன் இந்த ஒருநாள் என் ஆயுள் முழுமைக்குமானதாய் இருந்துவிட எண்ணிக்கொண்டேன்,
நேரம் வீணாவதை உணர்ந்து நடக்க தொடங்கினேன்,
கடல் நுரையில் கால் நனைத்து சில நிமிடம், பெளர்ணமி நிலவோடு காதல் புரிந்து சில நிமிடமாய் நேரம் பறந்தது!
பூக்களின் வாசத்தை நாசிக்கு நுகர்ந்துகொண்டே, கனி சுவைத்து நடந்துக்கொண்டிருந்தேன். யாருமற்ற வனாந்திரம், பெளர்னமி, நடந்து, அமர்ந்து மரமேறி அணுஅணுவாய் ரசித்துக்கொண்டிருந்தேன் இன்பத்தை.
அந்த சொர்க்க நிமிடங்களுக்கு அபயமளித்தது, ஒரு ஓலம்!
ஊளையிட்டவாறே ஒரு நரியும், தொடர்ந்து 2 புலியும்! பல நாள் பசிக்கு இரை கிடைத்ததென இறைக்கு நன்றி செலுத்திக்கொண்டு நின்றன! 
வேறு வழியில்லை விடியும் வரை திக்குத்தெரியாத காட்டில் ஓடிக்கொண்டிருக்க வேண்டும்.
“ஏய் சனியனே எந்திரிடீ”
களைத்து எழுந்தேன், ஓடிய களைப்பைவிட அக்கிரமத்தை எதிர்க்க துணிவில்லாமல் ஓட நினைத்த அவமானத்தால் மனம் கனத்தது!

2 comments:

  1. ரியாஸ் மாதிரியான எழுத்து நடை.பிரமிக்க வைக்கிற வார்த்தைக் கோர்வைகள். வழக்கம் போலவே எழுத்துப் பிழைகள்.- அனானிமஸ்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி :) பிழைகளை சரிபார்க்கிறேன் :))

      Delete