Friday, June 14, 2013

எப்படி முளைத்தது காதல்!

காற்று களைத்த பின்னும்

காதல் படிக்கிறேன்

இமைகளுக்குள் கொஞ்சம்

உடைகளுக்குள் கொஞ்சம்

ஆன்மாவுக்குள் கொஞ்சம்

ஏதோ என்னை இழுத்து பிடித்தபடி

உனக்காக இப்படி

புலம்பச் செய்திட்டதென்னை!


நாணமெப்படி

நானுமெப்படி

உன்னையே என்னியபடி,

நகம் வெட்டி சதை கிழித்த நகவெட்டியிடம்

நெற்றியை முட்டி உடைத்த தூண்களிடம்

கேட்டுக்கொண்டிருக்கிறேன்

எப்படி இப்படி

எனை மாற்றிப்போட்டாய் நீ!

மென்மையை மட்டும்

எதிர்பார்த்திருந்தபடி நான்...

என்னையும் மறந்து

மரிக்கத் தெரியாமல்

முளைத்த காதல் இறக்கையை

மடக்கவும் தெரியாமல்..

அதிரத் தாக்கி

என்னுள்

எப்படி இப்படி காதலை விதைத்திட்டாய் நீ!

4 comments:

  1. உன் கிட்ட பிடிச்சதே உனக்கான இந்த எழுதும் ஸ்டைல்தான்... ஆனா இதுல எதையும் சுட முடியல...ஏமாற்றங்கள்....:(

    ReplyDelete