Sunday, February 10, 2013

கவிதை கிறுக்கல்கள்-1

நான் கிறுக்கி பதிவிட்ட சில கிறுக்கல்கள்

http://double-a-kirukkal.blogspot.in/ ல் வெளிவந்தவற்றின் தொகுப்பு இது :-


1)

சில்லுகளாய் உடைந்த கண்ணாடியின் சப்தம் 



உடைந்தது கண்ணாடி அல்ல 

உன் சிரிப்பால் என் மனம் 

என்ன செய்வேன் நான்

சிதறிய ஒவ்வொரு சில்லிலும் 

நீயே சிரிக்கிறாய்....

2)
கதறல்களின் ரீங்காரம்

அலறல்களின் அங்கீகாரம்

காதலின் கவிதைகள் 

இவைகளின் வெளிப்பாடாய்

கண்கள் பேசும் பாஷை 

சத்தம் இல்லாததாம்....

கண்கள் மெளனத்தின் திருஉரூ அல்ல

மறைத்து வைக்கப்பட்ட

மனகுமுறல்கள்


சந்தோஷங்கள்


அன்பு


இவற்றின் பாஷை

கண்கள் பேசும் பாஷை.....

வார்த்தைகள் இல்லாத வேளைகளில்

வார்த்தைகளாய் 


அடக்கிய உணர்வுகளின் வெளிப்பாடாய்


கண்கள் பேசும் 


பாஷை -கண்ணீ ர்...

கண்ணீரை துடைக்கும் நட்பாய்

நான் இருக்கிறேன்

இருக்க முயற்சிக்கிறேன்

என் கண்கள் வரை நீளும் 

விரல்களுக்கான தேடலுடன்...


3)


என்னை பாதிக்கும் மனதுக்கும்


என் கண்ணத்தை நனைத்த


துளிகளுக்கும் மட்டுமே தெரியும்

என் கண்ணீரின் காரணம் 

என்னவென்று...

4)
என் நண்பர்களிடமிருந்து நான் பெற்றுக்கொண்டேன்;

எப்போதும் நீளும் கரங்கள்

அன்பாய்
ஆதரவாய்..

எப்போதும் நீளும் தோள்கள்

அன்பாய்
ஆதரவாய்..

என்றென்றும் மகிழ்ச்சி தந்தன..
எப்போதும் மறக்காத நினைவுகள் 
அன்று சிரிப்பை தந்தது

இன்று அழுகையை தருகிறது......



5)
உன் கருவறைக்குள் 


காற்றளித்தாய்


கனிவவளித்தாய்


உணவளித்தாய்


என் தாய்...


மருண்டு உருண்ட நேரங்களில்


ஆதரவளித்தாய்


கோப வேளைகளில் சூரியனாய்
சுட்டெரித்தாய்


சுட்டெரித்த பின் பனித்துளியாய் உருகி
தவறை உணர்ந்து திருந்த வைத்தாய்
என் தாய் நீ...
என் உயிர் நீ...

6)
தேதி முடிந்த கடிகாரத்தின் மின்கலங்கள்


உணர்த்துகிறது


மரணம் என்று வேண்டுமானாலும்


நம் வீட்டுக் கதவை தட்டும்...


கையோடு கடிகாரம் அனிந்து


நாளை செய்யலாம் என தள்ளி


வாழ்நாளில் ஒரு நாளை இழக்கும் 


இறக்க போகும் எதிர்காலத்தை எதிர்பார்போர் நினைவில் கொள்க...

7)

உன்னை நேசிக்கும் உள்ளங்களை 



நீ நேசித்தால்  அது- கடமை  

உன்னை  வெறுக்கும்  உள்ளங்களையும் 

நீ  நேசித்தால்  அது - இனிமை.....

இனிமையான  கடமை

உன்  உறவுக்கு  பெருமை

8)
என்  கண்கள்  கண்ணீர்  விட்டபோது   

நீண்டு  துடைக்காத   

கரங்கள் -நீள்கின்றன 

என்  இதழ்   புன்னகைக்கையில்   

கை  குலுக்கி ...

மகிழ்ச்சி  கொள்ள
விந்தை  உலகமடா  இது!!!







No comments:

Post a Comment