Sunday, February 10, 2013

என்னுயிர் தோழன்

அமானுஷ்யா!
நம்மில்
காதலை கண்டவர்க்கும்
நட்பைக் கற்றுக்கொடுத்தாய்!
ஆறுதலில் அன்னையாய்
தேற்றுதலில் தமக்கையாய்
தண்டனைக் கொடுப்பதில் தந்தையாய்
தோள் சாய்க்க தோள் தருவதில்
தமயனாய்
செல்ல கேலி செய்யும் தோழியாய்
சோர்வின் சுவடழிக்கும் ஆசானாய்
நீ யாவுமாய்!
ஒற்றைப் புன்னகையில்
நட்பு தந்தாய்
எத்துனை மலிவானது உனதன்பு!
என் விரல் பிடித்து
ஊர் சுற்றிக்காட்டும்
வழிப்போக்கன் நீ!
என்னைச் சீண்டும் காலிகளுக்கு
காளி நீ!
என்
பஞ்சுமிட்டாய் செலவுகளுக்கு உண்டியல்
நீ!
என் தடைகளை உடைத்து
என்
வெற்றிக்கு வழிவகுக்கும் வரம் நீ!
உன் காதலுக்கென்னை
தூதனுப்பினாய்
தன்னுடமைத்திமிர் மறைத்து
தூது போனேன்!
உன் காதல் மடலின் முதல் வரி
உன்னைக்
காதலிக்கிறேன்
இவளை நீ காதலிப்பதாயின்!!
அமானுஷ்யா!!!

2 comments:

  1. என்
    பஞ்சுமிட்டாய் செலவுகளுக்கு உண்டியல்
    நீ!


    !! பெண்ணாதிக்கம் !!

    ReplyDelete