Sunday, February 10, 2013

கவிதைக் கிறுக்கல்கள்-2


நான் கிறுக்கி பதிவிட்ட சில கிறுக்கல்கள்

http://double-a-kirukkal.blogspot.in/ ல் வெளிவந்தவற்றின் தொகுப்பு இது :-


9)

கல்லூரி காலமே வெகு வேகமாய் 

நீ மறைந்து போகிறாய் 

மறந்து போவதில்லை 

உறவில்லா உறவினரே 

விலகி  போவதில் 


 நீர் 


ஆர்வம் காட்டுகிறீர்  


என்  கண்ணீரின்  விலை  அது  


என்பதை  அறியாமல்..


நிஜத்தில் இறந்து நினைவுகளில் உயிர்வாழும் 


என்றும் இறவா நம் நட்பின் நினைவுகள்...

10)
உன்  கவலைகளுக்கு  வண்ணம்  பூசாதே  


உன் கனவுகளுக்கு  வண்ணம் பூசு 


வாழ்க்கை  வானவில்  ஆகும் 

11)

சில   புன்னகை  காயபடுத்தும்    

சில புன்னகை கற்றுகொடுக்கும் 

நீ  கற்றுகொடு 

காயபடுத்தாதே....!

12)
உன் நினைவுகள்
காற்றைப்  போல
ஒரு நொடி சுவாசிக்க
மறந்தாலும்
என் உயிரை யாசிக்க
நேரிடும்
சரணடைந்தேன்
உன்னிடம்
உன் இதயமே எனக்கு
உறைவிடம்

13)
உன்னை நான் விரும்புகிறேன்
உன் கண்களை மட்டும் 
வெறுக்கிறேன்
கண்கள் 
என் உயிர் செல்களை 
சில்லு சில்லாய் உடைத்து எறிவதால்....
14)
நான் மட்டுமே 

என்றிருந்த என் உலகம் 

நாம் எல்லோருமே 

என்று மாற்றியது 

என் நட்பு

சோகத்தில் அழுவதுதான் விதி

என்றிருந்த என் உலகம் 

சோகத்தை சுகமாய் மாற்றும் 

வழியை அறியவைத்தது 

என் நட்பு

இன்பமாய் இருந்தேன் 

நட்பே நீ துணை இருந்தாய்

துன்பமாய் இருந்தேன்

நட்பே நீ தோள் கொடுத்தாய் 

இன்று பிரிவோம் என்ற வேளையில் 

நட்பே என் நெஞ்சை நீ கணக்க வைக்கிறாய்

15)
விட்டு போன உறவுகளுக்காக

உன்னை ஒட்டிக்கொள்ளும் உறவை 

தள்ளி வைக்காதே 

உண்மையான உறவு

நீ 

நெட்டி தள்ளினாலும் உன்னோடு உறவாடும்

உன்

நிழலாக அல்ல நிஜமாக !!!

16)
நீ இடம் பிடித்தாய் 

இதயத்தில் அல்ல என் உயிரில்;

இதயம்,

நீ துடித்து நான் வாழ்வேன் 

உயிர், 

நீ இல்லையேல் நான் துடிப்பேன்...

17)
கோபம்

உன்னை மீறி உணர்வை

ஆளும்

உணர்வை மீறி

உயிரை ஆளும்

ரத்தத்தில் கொதிப்பு ஏறும்

உன் உயிர்

இறைவனை சேரும்....

கோபத்தை இழந்து விடு

உன் உயிரை காத்து விடு.............................!!!

18)
காலம் கடிகாரம் போல

நில்லாமல் ஓடும் நிம்மதியாக

காலத்திற்கு காதலும் தெரியாது

கண்ணீரும் புரியாது...

19)
மழலையர் பள்ளியில் நான்

மருத்துவர்

மேல்நிலைப் பள்ளியில் நான்

பொறியாலர்

கல்லூரியில் நான்

முதுகலை பட்டதாரி

இளங்கலை முடிந்த பின் நான்

கூண்டுப்பறவை...

(பி.கு: கனவுகள் வெரும் நேர விரயம் தான், அதற்கு உயிர் கொடுக்காதவரை)

20)

தேர்ந்தெடுத்த வார்த்தைகளால் கவி புனையும்

கவிஞனல்ல நான்


இதய அறைக்குள் இருட்டிக்கிடக்கும்

உணர்ச்சிக்கு

வெளிச்சம் வரும்போதெல்லாம் அதை வார்த்தை மணிகளாய்

கோர்க்கத்தெரியாமல் தோற்று போகும்

அசட்டுக் கிறுக்கி...................................................


21)
என்னோடு இணையும் கரமென நினைத்து

இருட்டுக்குள்

 கை நீட்டினேன் 


அது எரிந்து முடித்த மத்தாப்பு என்பதை அறியாமல்...............


22)

பூமி மறுதலிக்குமோ என்றஞ்சித்தான்,

மா,பலா,வாழை

பயிரிடும் ஆசையைத் தள்ளிவைத்தேன்!!!

மண்ணுக்கும் விதையேந்த ஆசை போலும்

பிளந்து கிடக்கிறது விதை வாங்க......!!!

2 comments: