Saturday, February 9, 2013

பூமியை காதல் செய்!

இது பாழாய்ப் போன பூமி. எவ்வளவு இடுக்கண் தந்தாலும் பொறுக்கும். ஆனால் சீறினால் சின்னாபின்னமாவோம்!
இந்த அண்டத்தில் இருக்கும் அரிய கோளான பூமி வளம் மிகுந்ததாய்த்தான் இருந்தது, இதை பேணிக்காக்க வீட்டுக்கொரு மரம் வளர்க்க சொன்னார்கள்.
நாமும் வளர்த்தோம் போன்சாய் மரம் போல!
சரி புவி வெப்பமடைதலின் பல்வேறு பரிணாமம் கண்ட நாம் அதைக்காக்க இன்னுமொரு பழைய வழிமுறை சொல்கிறேன்.
Green Computing
ஆரக்கிள்,விப்ரோ போன்ற கம்பெணிகள் கூட இதை பின்பற்றுவதில் மகிழ்ச்சி. நம்மில் எத்துனை பேருக்கு தெரியும் இது?! நாமதிகம் பயன்படுத்தும் கணினியின் மூலம் மாசடையும் சுற்றுச்சூழலை காக்கும் வழியறிதலே green computing என்பதை இணய பயணீட்டாளர்கள் அவசியம் அறிய வேண்டும்!
கணினி பழுதடைந்தாலோ,அதைச்சார்ந்த பொருட்கள் பழுதடைந்தாலோ தூக்கி போடுகிறோம்,அது மாசு உண்டாக்குவதை அறியாமல். கறுப்பு திரை பார்த்து நிறத் திரை ஒழிப்பதும் கூட ஒரு வகையில் சக்தியை மிச்சம் செய்வது!
தேவையில்லாமல் ஸ்க்ரீன் ஆன் செய்யாமல் தேவையான வேளைகளில் மட்டும் உபயோகிப்பது, இப்படி நிறைய. இன்னுமொரு அம்சமாய் அறிஞர்கள் கூறுவது உங்களின் பிசியின் ஏதோ ஓர் பாகம் செயலிழந்தால் அதை மட்டும் சீர் செய்வது.
நம் கணினியின் திரை போல சக்தியை உபயோகிப்பது வேறெதுவும் இல்லை என்பதறிக!
ரீசைக்கிள் எனப்படும் மறுசுழற்சி முறை க்ரீன் கம்ப்யூட்டிங்கின் இன்னுமொரு கருவி!!
அறிந்த தெரிந்த ஆன்றோர்,சான்றோரே கணினி ஆதிக்கத்தில் வாழும் நாம் இதை அறிதல் அவசியம் என்பதால்தான் இந்த மிக மேலோட்டமான பதிவு!

உயிர் காக்க இயற்கைவளம் காப்போம்!
பிதற்றுவேன்_/\_

No comments:

Post a Comment