Saturday, April 6, 2013

அப்பாவின் உலகம்!

அந்தாக்ஷரியில் தொடங்கி அப்பாவில் முடிந்தது அன்றைய தோழிகளோடான உரையாடல். எப்போதும் போல் அரட்டை எனத் தொடங்கிய அன்றைய உரையாடல் ஒரு ரணமாய் இதயத்துள்!


அவள் கலகலப்பான பெண், என் இனிய தோழி! ரித்து. ரித்துவின் தந்தை ஒரு பழமைவாதி, சிறு வயதில் தோளோடணைத்து வண்ணத்துப்பூச்சி கதை சொல்லி உறங்கவைத்த அந்த அன்பான அப்பா, கொஞ்சம் அதிகமான கோபகுணமுடையவர் என அவள் அறிந்திருக்கவில்லை! அம்மாவுக்கும் அப்பாவுக்குமான செல்லச்சண்டைகள், கேலிகளை தன் சிறு பிராயம் முதலே கண்டதில்லை! தோழிகளோடான அளவளாவலில் அவள் அறிந்த அப்பாக்கள் யாருமே தன் அப்பாவோடு ஒத்துப்போகவில்லையென பல முறை தலையணை நணைத்திருக்கிறாள் இரவுகளில்!


பத்து வயது சிறுமிக்கு அப்பாவின் அன்பில் குறைதலோ மாற்றமோ தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. அம்மாவோடான அந்த அழகிய வாழ்வில் அவள் நர்சரி கடைசி ஆண்டிலேயே தன் தந்தையை முழுமையாய் அறிந்துகொண்டிருந்தாள்!

அவரின் உலகம் விசித்திரமானது, தான் மட்டும் தான் அந்த உலகின் மிக முக்கிய உயிரினம். தன்னோடொத்தவர்களில் தன்னைப் புகழ்வோர் மேல் அதீத அன்பும், தன் வார்த்தைக்கு மறுபேச்சு பேசுவோரின் மேல் அதீத வெறுப்பையும் காட்டிவிடுவார்!

காலை எழுந்ததும் செய்திகள், அலுவல், மதியத்தில் வீட்டில் உணவு, உறக்கம், பின்னான அலுவல் முடிந்ததும் வீட்டுக்கு வந்தாரென்றால் அவர் அறைதான் அவரின் தஞ்சம்! பேசும் வார்த்தைகளில் அளவிருக்கும், எப்போது கோபம் வரும் என கணிக்கவே முடியாது! என்ற என் ரித்துவின் கண்ணீர் தந்தையின் அன்புக்கான அவளின் ஏக்கத்தை எனக்குணர்த்த தவறவில்லை!

அவரின் அன்புக்கு அவள் குடும்பத்தில் பாத்திரமான ஒரே ஜீவன் அவள் மட்டும்தான்!  அவரறிந்த அன்பின் வெளிப்பாடு மகளின் தேவைகளை பூர்த்தி செய்வதுதான், சரமாரியாக வார்த்தையாடவும் திட்டவும் அவளுக்கு மட்டுமே உரிமை அதிகம்!

அவளின் விடியலே பெரும்பாலும் அம்மா, அப்பாவின் உரத்த சம்பாஷனைகளால்தான் நிகழ்ந்திருக்கிறது. இவ்வாறாக அன்புக்கு ஏங்கி இதயம் கணத்த ஓர் வேளையில் அம்மாவின் கைப்பிடித்து அப்பா ஏன்மா இப்படி என ஒருமுறை கேட்டிருக்கிறாள்

"எல்லோரும் மதிக்க வேண்டும், புகழ வேண்டும், பணம் கையில் புழக்கம் இருந்துக்கொண்டே இருக்க வேண்டும், தன்னை யாரும் குறையே சொல்லக்கூடாது, இதுதான் உன் அப்பா. உன்னை அவர் கண்டுகொள்ளவேண்டும் என ஏங்காதே மகளே, தோற்றுப்போவாய்! "உனக்காகத்தான் நான் வாழ்கிறேன்!" "

இது கண்ணீரோடு அவள் தாய் பகர்ந்த துக்கம்! இன்றுவரை அவளறிந்த அப்பாவின் உலகத்தில் அவர் மட்டும்தான் இருக்கிறார்.

சமீபத்திய ஓர் அலைபேசி உரையாடலில் தன் கணவன் தன் அப்பாவைப்போல் இருந்துவிடக்கூடாதென்ற கனவு பலித்ததை மகிழ்ச்சியோடு கூக்குரலிட்டு அவள் பகிர்ந்த நாழிகையில் இதயம் வலிக்கத்தான் செய்தது!



தோள் சாய, தலை கோதக்கூட தேவையில்லை! ஓர் அன்பான பார்வையை செலுத்தி 'என்ன கண்ணம்மா' எனக்கேட்டிருக்கலாம்! அவள் விம்மியிருக்க மாட்டாள்!

அப்பாக்களின் உலகம் மிகப்பெரிது தான், பல அப்பாக்கள் தனக்கான உறவுகளை கண்டுகொள்ளாமல் தன்னைச்சுற்றிய உலக்கத்துக்கு, தான் அரசனாக வேண்டுமென அரியணை எழுப்ப முயல்கிறார்கள்! தன் உலகத்தை மறந்து ஆகாசத்தில் கோட்டை கட்டுகிறார்கள்! சொல்லிப்புரிய வேண்டியதில்லை, நான் சொல்ல விரும்புவதெல்லாம் அன்பை வெளிப்படுத்துங்கள், இதயம் உடையாமல் இருக்க!

............................................பிதற்றுவேன் .......................................................

17 comments:

  1. வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் விசித்ரமாய் அமைத்துவிடுகிறது..இருபவருக்கு ஒரு கவலை,இல்லாதவருக்கு ஒரு கவலை.இருப்பதை இறைவன் கொடுத்ததாய் ஏற்று வந்தாலே அழகாகிவிடும்,அத்தகைய மனம் மனிதர்க்கு இருக்கிறதா என தெரியவில்லை :( என் அப்பாவோ ஆறாம் வகுப்பும் படித்ததில்லை.. அவர் சம்பாத்தியம் இப்போது நாங்கள் இருக்கும் வீட்டு வாடகையை விட குறைவு.நானும் எங்கோ ஒரு கிராமத்தில் மாடு மெய்து,வயல் வேலையில் இருக்க வேண்டியவன் இன்று நகர உயர்தர கல்லூரியில் பயில்கிறேன்.தற்போது திரும்பிபார்த்தால் இதில் எது சிறந்தது என கூரவியலவில்லை நகரத்து நெரிசலில் வாக்கையை தவிர்த்து அனைத்தும் கிடைத்து விட்டது :( #விதியின் கதைகள் ஒவ்வொன்றும் சுவாரசியமானவை ரசித்து பழகுங்கள்! - அன்புடன் தங்கள் தம்பி

    ReplyDelete
  2. ;-)) சின்ன வயசுல ரூல்டு நோட் தான் எழுத யூஸ் பண்ணூவீங்க போல

    ReplyDelete
  3. இனிய நடை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. கண்டினியூ..கீப் இட் அப் :)

    - @rasanai

    ReplyDelete
  5. அப்பாக்கள் பல வகை. நீங்கள் சொல்லுவது அதில் ஒரு வகை.
    படித்தேன் .ரசித்தேன் .

    ReplyDelete
  6. எளிய நடையில் ஆழமான பதிவு.... Y cant u send it to sirukathaigal.com.... i hope they will publish this one....

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள மீறூ அவர்களுக்கு,

      ஒரு கூகிள் தேடலில் உங்கள் தளத்தை வந்தடைந்தோம். உங்களுக்கு விருப்பம் இருந்தால், சிறுகதைகள்.காம் என்ற எங்கள் தளத்தில் உங்கள் கதைகளை பதிவு செய்ய அழைகிறோம்.

      நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

      என்றும் அன்புடன்,
      ஆதரவுக் குழுமம், சிறுகதைகள்.காம்.

      Delete
    2. அனுப்பியிருக்கேங்க, நறுமுகை என்ற பெயரிலேயே வெளியிடவும், நன்றாக இருப்பின். நன்றி!

      Delete
  7. ///எல்லோரும் மதிக்க வேண்டும், புகழ வேண்டும், பணம் கையில் புழக்கம் இருந்துக்கொண்டே இருக்க வேண்டும், தன்னை யாரும் குறையே சொல்லக்கூடாது, இதுதான் உன் அப்பா/// யோசிச்சு பாத்தா இங்க இருக்குற எல்லாருமே இப்டிதானே.... :))

    ReplyDelete
    Replies
    1. அதற்காகவே, அதற்காக மட்டுமே வாழ்பவர்கள், தன்னை மட்டுமே யோசிப்பவர்கள்... //எல்லாருமே இப்டிதானே// எனக்கு தெரிஞ்சு இல்லை :)

      Delete
  8. Well written! I am one of the lucky guys! I have the best dad in the world. Amma used to beat me a lot. But Appa not even once. The most calm, collected, loving, supportive Father for me. I just gave him a hug, after reading your post. Thanks, keep writing! :-)

    ReplyDelete