Friday, June 7, 2013

"நீ"யாகிய "நான்"!

மூத்தவர் சம்மதியில்
நம் மனம் முடிச்சிடப்பட்டபின்
விழியால் கதை பேசி
அணுக்களுக்குள் நுழைந்து என்னுள்
காதலை விதைத்திட்டாய்!


மழை நனைத்த காற்றின் பகுதியொன்று
மெய் தொட்டு விளையாடி
நடந்தபின்,
என்னுள் நுழைந்து கொள்ளும்,
உன்னுள் தொலையவே
நானும் கிள்ளையாகி ஏங்கிக் கிடக்கின்றேன்!

முதல் வார்த்தை பேசிடவே ஆயிரம்
ஒத்திகைகள் ஆனபின்னும்
துடிக்கும் இதயம், என்னை அதிரச் செய்வதை
நிறுத்திய பாடில்லை!



நாணம் தொலைத்து உன்னிடம்
அடைக்கலம் ஆகிடத்தான் குருதி குதிக்கிறது,
உனக்குள் வார்த்தை விதைக்க
நா அசைக்க முயல்கையில்
தோற்றடங்கி
மேல் அன்னம் ஒட்டிய நாவுடன்
மொழி மறந்த பேதையாகி மலங்க விழித்தபடி
நிற்க நேரும் நிமிடங்களை எண்ணியே
என்னை அடக்கிக்கொள்கிறேன்
இப்போதெல்லாம்!

நாணி விறைத்து நடுங்கும் என் விழிகள்
உன் குளிர் பார்வையில்!
வலி தரும் பட்டாம்பூச்சிகளை
அறிமுகம் செய்வித்திருக்கிறாய் நீ!



அணு அணுவாய்
உனை சேரத் துடிக்கும் இம் மெய் அடக்கி
ஒவ்வொரு முறையும்
ஒத்திப்போடும் போதெல்லாம் மனம் கெஞ்சுகிறது
"எனக்கு ஒரு ஃபோன் பண்ணிதான் தொலையுங்களேன்"




14 comments:

  1. Ada kalakkal :-) romance malai poliyudhu, ennavo nadakkudhu :-)

    ReplyDelete
  2. Meeeru Rocks.... Awesome feeling...

    ReplyDelete
  3. enkita rendu kai than iruku.. so ennala mudinja alavuku sathama clap pandren....

    ReplyDelete
  4. உன் கவி தோய்ந்த விரல்களுக்கு
    செவி மடுத்து காத்திருக்க
    காற்றலையில் வீசுகிறாய்
    தேன் கொஞ்சும் பைந்தமிழை
    நெஞ்சம் நெகிழ்ந்து எனை
    அவை உட்கொண்டு அருந்திய பின்
    பழுத்து சுவைக்கிறது செவியும்...
    இப்ப்புவியும்

    ReplyDelete
  5. இதே கவிதைய கொஞ்சமா டிங்கரிங் பண்ணி அவளுக்கு அனுப்பியாச்ச்... இதுக்காகவே நீயெல்லாம் எழுதனும் மீரூ...:)))

    ReplyDelete
  6. அசரடிக்கும் தமிழ் ஆளுமை :)

    ReplyDelete