Monday, January 21, 2013

உளறல்

பிறக்கும்முன்னே எனக்கு பயம் பிறந்துவிட்டதென்று நினைக்கிறேன்,

இல்லையென்றால் என் தாயின் கருவறைக்குள் அழிய எத்தனித்திருக்க 

மாட்டேன். ஹூம் என்ன செய்ய பத்து மாதம் படுத்தி எடுத்துத்தான் பிறந்தேன்.

கடைக்குட்டி நான். வாழும் பொழுதெல்லாம் தொழுது போற்ற வேண்டிய என் 

தாய்க்கு என்ன கைமாறு செய்வேன்? படிக்கவும் வேலை செய்யவும் 

கையாலாகாத நிலையில்? கவிதாயினியாக முயற்சித்தேன், 

"இலக்கியமில்லா  கவிதை"  என்றார்கள். எழுதலாம் என்று ஆசைப்படுவதாய் 

சொன்னேன் "நீ எழுதி  யாரு படிப்பா" என்று மட்டம் தட்டினார்கள். பிளாக்கில் 

கவிதை எழுதாதே அதை  பலர் தங்கள்  பெயரில் பதிவு செய்யலாம் 

என்றார்கள், ஆன்லைனில் பார்டைமா வேலை செய்கிறேனென்றேன் அது 

எல்லாம் போலி என்றார்கள். உனக்கெதுக்கு இந்த தேவையில்லாத வேலை 

என எரிந்து விழுந்தார்கள். என் பெயரால் என் பெற்றோரை பெருமை அடையச் 

செய்ய வேண்டும் என்று கனவு கண்டேன், என் கனவுகள் கரி பூசப்பட்டன.

நான்  பீனிக்ஸ்  அல்ல எரிக்க எரிக்க  சாம்பல் உதிர்த்து மீண்டும் சூரியனை

தேடிப் பயணிக்க. என் இறக்கைகள் முளைக்கும் போதெல்லாம் வெட்டும் 

கத்தரிக்கோல்களுக்கு முன் என்னை நிலை நிறுத்திக்கொள்ள எனக்கொரு 

அடையாள முகம் தேட இந்த தேடலைத் தொடங்கினேன். இதற்காகவே 

ட்விட்டரில் அவதரித்தேன். என் முயற்சிகளை களையருக்கும் 

கத்திகளுக்குமுன் நான் புனைப்பெயரில் வளர்ந்து காட்டுவேன். இன்று

என் மெளன உண்டியலை உடைக்கிறேன்.இந்த பிளாக்கை என் மீது அன்பை

மட்டுமே பொழியும் என் குடும்பத்தினருக்கு அர்ப்பனிக்கிறேன்.

சரி சரி திட்டாதீங்க விஷயத்துக்கு வரேன்.வளர ஆசைப் படுறவங்களோட 

முதுகெலும்பை உடைக்காதீங்க, ஒரு முயற்சி செஞ்சுத்தான் பாக்கட்டுமே!!! 

ஆதரவுகளை வேண்டி..................._/\_


பிதற்றுவேன்...................................................!!!

6 comments:

  1. பிதற்றல்களுக்கு வாழ்த்துகள். அடுத்தமுறை ஒன்றிற்கிரண்டாய் பிழைகளைக் களைந்து பதிவிடுங்கள். ஒரே வாக்கியத்தில் இருமுறை 'நான்' கண்டேன். தங்களுக்கு தன்னம்பிக்கை ஜாஸ்திதான் என்பதை இதன்மூலம் உணரமுடிகிறது. ;-))

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி, கொஞ்சம் அதிகம் தான், இல்லாவிட்டால் எழுத தொடங்கியிருக்க மாட்டேன். தவறுகளை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.களைகிறேன். தொடர்ந்து ஆதரவு தர வேண்டுகிறேன்
      :))

      Delete
  2. தடைகள் பல வந்தாலும்
    தடுத்து எவை நின்றாலும்
    உனக்குள் இருக்கும்
    உன் கவுரவத்தை புதைத்துவிடாதே!!
    தேடல் பல செய்
    தோழ்வி பல தொடு
    வீல்ந்தாலும் எழும் தன்னம்பிக்கை
    வளர்த்துக்கொள்.
    தூற்றும் வார்த்தைகளில் துவண்டுவிடும்
    சாதாரண பெண் இல்லை.
    சாதிக்க பிறந்த சாதனை பெண் என
    அனைவர்க்கும் காட்ட வாழ்த்துக்கள்.தோழி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி எரிக் :))

      Delete
  3. பேசதெரிந்தவள்ன்னு பேரை மாத்திக்கோங்க மேடம் :))

    ReplyDelete