Tuesday, February 19, 2013

நித்"திரை" நிமித்தமாய்!!!

உறையவைக்கும் பனி இரவில்
உரத்த யோசனை
உறக்கம் கெடுத்துக் கொண்டு!

சந்தித்த மனிதனைப் பற்றி
சிந்திக்க சில நிமிடம்!

சண்டைக்கு இழுத்த உறவின்
சாரம் சில நிமிடம்!

எதிர்கால இன்பம்
பற்றி
எகத்தாளக் கற்பனை சில நிமிடம்!

என்னோடான சந்தோஷ,சோக,கோப,
ஆக்கிரமிப்புகளில்
சில நிமிடம்!

நான்
என்னை நிந்திக்க சில நிமிடம்!

பாராட்ட சில நிமிடம்!

நிமிடங்கள் நடைபோட
குளிர் பரப்பி
நித்திராதேவியின் காதலுக்கு
ஆளாக சில நிமிடம்!

நிரந்தரமில்லாதது உறக்கம்!
வாழ்நாள் முடியும் வரை!!!

No comments:

Post a Comment