என் இனிய அன்பர்களே இது ஆண் தவறு, பெண் குற்றம் என்பதான பதிவல்ல.
பெண்களை படிக்கவைத்து வேலைக்கும் அனுப்பும் சமூகத்தில் இன்னமும்
படிக்கவோ வேலைக்கனுப்பவோ மறுப்புகளை சந்திக்கும் பெண்கள்
இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அதற்கு ஆண்கள் மீதான பயம்,பெண்
மீதான சந்தேகம்,ஈகோ, என்ற காரணங்களும் இருக்கின்றன.சரி
விடுங்க, இங்கு பெண் சிசுவை கள்ளிப்பால் ஊத்தி கொல்லுகின்ற கலாச்சாரம்
குறைந்துவிட்டாலும் பெண்ணை பாரமாய் நினைக்கும் மூடத்தனம்
மாறவில்லை. கல்யாண சந்தையில் பெண்கள் என்ன பொம்மைகளா? பெண்
தேடும் பல அம்மாக்கள், தங்கள் பிள்ளைகளுக்கு வெள்ளையான பெண்
வேண்டும்,மூக்கு நீளமாய் இருக்க வேண்டும்,முடி இடை வரை
இருக்கவேண்டும் என்று பல முட்டாள்தனமான எதிர்பார்ர்ப்புகளை
முன்வைக்கிறார்கள் (இன்றளவும் கூட). சரிப்பா இது முட்டாள்தனம்
இல்ல,ஆனா ஒரு பெண்ணோட அழகை அவளுடைய நிறத்தை வெச்சு ஒரு
பெண்ணே அளவிடுவது முட்டாள்த்தனம்தானே? இது சின்ன விஷயம்தான்
ஆனால் இதனால் அந்த பெண்ணின் வலி?
வரும் வரணெல்லாம் நிறம் காரணமாய் அவளை நிராகரித்தால் அவள்
ராசியில்லாதவள் ஆகிறாள், பாரமாகிறாள், வீட்டைப்பிடித்த சனியாகிறாள்
விளைவு மன அழுத்தம். இப்படியே அழிக்கப்படும் அவளின் தன்னம்பிக்கை ,
பின்னாளில் கணவனிடம் "நா அழகில்லையா" எனத் தொடங்கி "அவளதான்
உங்களுக்கு பிடிக்கும்" என்பன போன்ற சந்தேக விதைகள் பலரின்
வாழ்க்கையை வேரோடு சாய்க்கும் அவல நிலையையும் நேரில்
கண்டதாலேயே இந்த சின்ன விஷயத்தை இவ்வளவு பெரிதாய் பதிவு
செய்கிறேன்.
தயவுசெய்து உங்களுக்கு நிறம் தான் முக்கியம் என்றால் அதை
சொல்லாமலாவது விட்டுவிடுங்கள்.உங்களுக்கு வேறு வரண் அமைந்ததாய்
அவள் நம்பி அவள் வீட்டுக்கு பாரமாய் மட்டும் இருந்துவிட்டு
போகட்டும்.சொல்லிக் கொ'ல்'வதற்கு சொல்லாமல் விட்டுவிடுவது மேல்.
ரொம்ப அருத்திருந்தா மன்னிச்சிடுங்க.......................................................
பிதற்றுவேன்............. _/\_

செம... நல்லா எழிதியிருக்கீங்க... நிறைய எழுதுங்க...
ReplyDeleteமிக்க நன்றி :))
ReplyDeleteதென் இந்தியாவில் தான் இந்த கலர் பெரிது படுத்த படுகிறது.
ReplyDeleteMay be :))
Delete