Friday, February 15, 2013

சேறு தவிர்த்த உழவன்!

உதயரேகை படரும்முன்
குளித்து உடை மாற்றி
ஏறுபூட்டிக் கிளம்பினான்

தீவனம் ஒன்றை புதிதாய்
ரசவாதிக்க
அன்றைய ஏறுதழுவல் அவனுக்கு ஆதாரம்!

பொய்த்த மாரியை
சபித்துக்கொண்டே உச்சி பொழுதுவரை உழுதும்
பாதி நிலம் மிச்சமிருக்க,
பண்ணையார் மகனும் வந்தான்
டிராக்டர் உழவனோடு!

கால் வயிற்றுக் கூழோடு
பூமியை கிழித்த
எலும்பொட்டிய மாட்டை ஏளனமாய் பார்த்துபின்
மிச்சமிருந்த நிலத்தை
கிழித்து
புழுதி பரப்பினான் புது உழவன்!

நேரம் மிச்சமென இவனும்
காரணம் கூற
கால் கூலியும்
கால் வயிற்றுக் கூழுமாய்
அவனும்
வயிறொட்டிய காளையும்!

2 comments:

  1. vingaanathin vibareedha valarchiyin thaakkam

    ReplyDelete
  2. இது ரசிக்கப்படகூடாத உண்மை! நன்றாக எழுதியுள்ளீர்கள். உழவனின் உழைப்பும், வலியும், நவீனமயத்தால் அவனின் ஏக்கமும் உங்கள் எழுத்தில் தெரிகிறது! வாழ்த்துக்கள் :)

    ReplyDelete