Friday, February 22, 2013

படைத்தவன் முன் புழு!!!

உடைத்தெறியப்பட்ட உடைந்த
கண்ணாடி நான்!
ஒவ்வொரு சில்லிலும்
பிம்பமாய் கண்ணீரும்,கோபமும்,ஆற்றாமையும்!

என் மெளனப்போர்களின்
உள் உறைந்த உஷ்ணக்
கேள்விகளுக்கு
விடையளிக்க கடவுளின் வருகைக்காக
மண்டியிட்டேன்!

வெக்கையில்  புழுங்கிய
புழுவுக்கு
தன்மை காட்டினான்!!!

கேளென ஒளி கேட்க...

நான் யார் எனக் கேட்டேன்?
விதையொன்று விழிமுன் தெரிந்தது!

களை எது எனக் கேட்டேன்
என் ஆசைக்கனவுகள் படமாகி என்னை எரித்தது!!

உரம் எது எனக் கேட்டேன்
அன்னையின் முகம் மனக்கண்ணில் அன்பைக்காட்டி!

சிலமுறை முயற்சித்தபின்

வரம் கேட்டு
புலம்பத் தொடங்கினேன்!
பேராசைக்காரி!!!

நோய் தந்தாய்
பிணி என்னை ஆரத் தழுவுகிறதென்று!

தோல்வியின் கரம்
என்னை பற்றியே இருக்கிறதென்று!

வீழ மட்டுமே
பழகி விடுவேனோ என்று!

கண்ணீர் அலை அடித்து
என்னை பாலைவனமாக்கிவிட்டாயென்று!

விரக்தி சாபமாய்
என்னை அணைத்திருக்கிறதென்று!

புன்னகை வரத்தை
நான் இழந்திட்டேனென்று!

மத்தாப்பு புன்னகையும்,
வானவில் வண்ணமுமாய்,
சில நாள் வாழ்க்கையாவது அமைத்துத் தா என்று!

யாசிக்கும்
என் கண்ணீருக்கு இன்முகமாய்
பதிலொன்று தா என்று!

பனிவில் தொடங்கி கதறி முடித்தேன்!

ஒளி மறைந்திருந்தது!

கொல்லன் பட்டறை கண்முன் தெரிந்தது!!!

என்னை இரும்புச் சிலையாய் வார்க்கிறானாம்!!!

பெருமூச்சோடு எழுந்து நடந்தேன்!
விடிந்திருந்தது,
இன்னும் விழிக்கவில்லை நான் மட்டும்!!!

அவன் மெளனிதான்
ஊனமுற்றவன் இல்லை!!!!!

இனித் தேடித் தேடி சாகவேண்டும்
விதைக்கு ஊன் எது என!!!

6 comments:

  1. சொல்ல வந்த மையக்கருத்து இன்னும் அதிகமாக இழையோடியிருக்க வேண்டும்.பெண்ணியம் அதிகம் எழுத தேன்முல்லை, மாலதிமைத்ரி வாசிக்கவும்.அட்டகாசமான ஆரம்பம். வாழ்த்துகள்.

    அனானிமஸ்:-)

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா தேங்க்ஸ் :)

      Delete
  2. இனித் தேடித் தேடி சாகவேண்டும்
    விதைக்கு ஊன் எது என!!!



    செம.. அருமையான வரி இது.. வாழ்த்துக்கள்..!!

    @black_selva

    ReplyDelete
  3. முதல் வார்த்தையிலேயே எழுத்து பிழை இருக்கோ?

    //நோய் தந்தாய்
    பிணி என்னை ஆரத் தழுவுகிறதென்று!// இது என்னன்னு புரியல...

    புதுக் கவிதைலேயே ரொம்ப யோசிச்சு புரிய வேண்டிய அளவு குழப்புறியே.. அப்போ மரபு கவிதை எழுதுனா... :))

    ReplyDelete
    Replies
    1. குழப்புறேனா சாரி இனி கவனமா எழுதுறேன் :))
      மரபுக் கவிதைக்கெல்லாம் நா சரியா வர மாட்டேன்...
      நா அம்புட்டு வர்த் இல்லை :))

      //நோய் தந்தாய்
      பிணி என்னை ஆரத் தழுவுகிறதென்று!//
      நோய்னா உடல் சார்ந்த வியாதி, பிணின்னா மனதையும் தாக்குவது.
      உடல் வியாதிகளால் மனமும் நோகிறதுன்னு சொல்ல வந்தேன் :))

      Delete